கோவிந்தவாடி குரு கோவில் உண்டியல் வருவாய் ரூ.8 லட்சம்
ADDED :845 days ago
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், உத்திரமேரூர் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலமேலு முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 8.11 லட்ச ரூபாய் ரொக்கமும், ஒன்பது கிராம் தங்கம், 8.20 கிராம் வெள்ளி என, வருவாய் கிடைத்துள்ளது. கோவில் செயல் அலுவலர் சுரேஷ், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.