உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தேவணாம்பாளையம் அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. நெகமம் அருகே, தேவணாம்பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரி விழா நேற்று துவங்கியது.விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 28ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !