உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.அவ்வாறு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் கடந்த 20 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பணத்தை (வருமானத்தை) கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசலு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர் கணக்கிடும் பணியில் இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கணக்கிடப்பட்டது அதன் விவரங்கள் பணமாக ஒரு கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 560 ரூபாய்:  தங்கம் 50 கிராம் ; வெள்ளி 438 கிலோ ; வெளிநாட்டு பணம் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு வெளிநாட்டு பணம் 72 டாலர்கள் கடந்த 20 நாட்களில் வந்ததாக கோயில் நிர்வாகம் தெரியப்படுத்தின.  கடைசியாக கடந்த 31- 5 -2023 அன்று உண்டியல் கணக்கிடும் பணி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !