ஆனி சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1160 days ago
கோவை : சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.