உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

வியாசர்பாடி: வியாசர்பாடி, மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதை தொடர்ந்து விழா நாட்களில் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, உற்சவர் சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி சேவை, பவளக்கால் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார்.இதில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, 22ம் தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான, ரவீஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர்.இன்று புஷ்ப பல்லாக்கு நடக்கிறது. வரும் 27ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்வுடன், ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா நிறைவு பெற உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !