உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் நடராஜர் தேருக்கு பருவத ராஜகுல சமுதாய மக்கள் சாரபில் வரவேற்பு

சிதம்பரத்தில் நடராஜர் தேருக்கு பருவத ராஜகுல சமுதாய மக்கள் சாரபில் வரவேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து வரும் ஆனி திருமஞ்சன விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது இதில் சிதம்பரம் நகர பருவத ராஜகுல சமுதாய மக்கள் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து 43 சீர்வரிசை பொருட்களுடன் கஞ்சி தொட்டி முனைக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிதம்பரம் நியூ மூர்த்தி கபே உரிமையாளர் மோகன், சிபில், விக்னேஷ், செல்வ விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகம், அறங்காவலர்கள் கட்டபொம்மன், பிரபாகரன், புதுச்சேரி எம்பி ராமதாஸ், சிதம்பரம் வி.ஆர். டெக்ஸ் உரிமையாளர் இளங்கோவன், மீனவ சங்க மாநில துணை தலைவர் கனகசபை, ஏ.ஜி.ஆர். கோவிந்தராஜ் கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், எடப்பாடி கிராம பருவதராஜகுல சமுதாய மக்கள், பக்தர்கள் சிதம்பரம் பருவத ராஜகுல சமுதாய மக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு திருத்தேரில் அமர்ந்திருக்கும் நடராஜரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !