மாரியம்மன் கோவில் திடலில் பொன்னர் சங்கர் திருமண வைபவம்
ADDED :913 days ago
பெருமாநல்லுார் ஊராட்சி, பொடாரம்பாளையம், மாரியம்மன் கோவில் திடலில் பொன்னர் சங்கர் உடுக்கை பாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 30வது நாளான நேற்று முன்தினம் இரவு பொன்னர் சங்கர் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டால் திருமணமாகும் என்பது ஐதீகம். இதில், திருமணம் ஆகாத ஆண், பெண் பலர் பங்கேற்றனர்.