வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :853 days ago
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
நுாற்றாண்டுகள் பழமையான இக்கோயிலில் கடந்த 2021ல் துவங்கிய திருப்பணி நிறைவடைந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நந்தி வாகனத்தில் சுவாமி புறப்பட்டு மின் அலங்கார ரதத்தில் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்தார். விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் முருகன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.