அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :913 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், சிவகாமி அம்மையார், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.