நம்பியாற்றில் 2 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு!
ADDED :4760 days ago
நான்குநேரி: நம்பியாற்றில் இரண்டு அடி உயரம் உள்ள சிலையை கண்டெடுத்தவர் வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர்.திருக்குறுங்குடி அருகேயுள்ளது நம்பிதலைவன்பட்டயம். இவ்வூரை சேர்ந்தவர் பாண்டிதுரை, மணிகண்டன். இருவரும் சேர்ந்து தங்கள் வயல்களுக்கு செல்வதற்காக நம்பியாற்றை கடந்து சென்றுள்ளனர். அப்போது நம்பியாற்றில் இரண்டு அடி உயரம் உள்ள பெருமாள் சிலை காலில் தட்டுப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரி ராமசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் விஜய் ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு அடி உயரம் உள்ள சிலையை மீட்டு, நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நான்குநேரி தாசில்தார் வரதராஜன் இதுகுறித்து விசாரனை மேற்கொண்டுள்ளார்.