அகத்தியர் கோயிலில் பௌர்ணமி பூஜை விழா!
ADDED :4763 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அகத்தியர் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் ஸ்ரீ அகஸ்தியர் கோயிலில் பொளர்ணமியை முன்னிட்டு இரவு அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம் மற்றும் மகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பொதிகை மழை புனிதயாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.