வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆனி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :887 days ago
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆனி 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கவுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.