காடுபட்டி காளியம்மன், அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :887 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே காடுபட்டியில் உள்ள காளியம்மன், அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் நாகேஸ்வரன், செந்தில்குமார் தலைமையில் மூன்று கால யாகபூஜையுடன் மஹாபூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்தனர். விழா குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.