கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆனி விசாக சிறப்பு அபிஷேகம்
ADDED :1139 days ago
கோவை: வின்சென்ட் காலனி, ஆர். எஸ்.புரம், உழவர் சந்தை அருகே உள்ள வரலட்சுமி விநாயகர், கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆனி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.