உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரிக்கல்லில் 2,000 ஆண்டு 45 அடி நடுகல் கண்டெடுப்பு தொல்லியல் குழுவினர் ஆய்வு

குமரிக்கல்லில் 2,000 ஆண்டு 45 அடி நடுகல் கண்டெடுப்பு தொல்லியல் குழுவினர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் அருகே, 2,000 ஆண்டுகள் பழமையான நடுகல்லை கண்டுபிடித்த தொல்லியல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, காவுத்தம்பாளையம் கிராமத்தில் குமரிக்கல் என்ற இடத்தில், 2,000 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை துறை பொறுப்பாசிரியர் ரவி தலைமையில், கொங்கு வரலாற்று பேரவையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய, ஏழு பேர் குழுவினர் குமரிக்கல் பகுதியில் நேற்று இதை கண்டறிந்தனர். இதை சுற்றியுள்ள கிராமங்களில், பழமையான கல்வெட்டு, தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !