உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டி சாய்பாபா கோவில் 6ம் ஆண்டு வருஷாபிஷேகம்

காரியாபட்டி சாய்பாபா கோவில் 6ம் ஆண்டு வருஷாபிஷேகம்

காரியாபட்டி: காரியாபட்டி சாய்பாபா கோவில் 6ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.

காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் ஸ்ரீகுபேர சாய்நாதர் கோயில் 6ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. முதல் நாள் ஸ்ரீ பகவதி சேவை, தீபராதானை நடந்தது. இன்று காலை கணபதி பூஜையுடன் தொடங்கப்பட்டது., கணபதி ஹோமம், சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. ஸ்ரீ சாய்நாதருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சாய்நாதர், மகா கணபதி பாலமுருகன், வெங்கடாஜலபதி, மகாலட்சுமி, ஸ்ரீ சாய் ராதாகிருஷ்ணன், ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குபேர சாய் பாபா திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !