உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கோயிலில் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும்

சிதம்பரம் கோயிலில் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும்

பழநி: பழநியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகம், மேலாண்மை குறித்து உச்சநீதிமன்ற உத்தரவை மாநில அரசு கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பழநியில் தமிழ்நாடு பிராமணர் சமாஜம் சார்பில் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர், சிதம்பரம் கோவில் நிர்வாகம் மேலாண்மை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 1954 ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 26ன் படி சிதம்பரம் தீஷதர்கள், ஒரு மதப் பிரிவினர் என்பது தீர்க்கப்பட்ட உண்மையாகும். அதேபோல் ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 107 படி, இந்த சட்டம், ஒரு மத பிரிவுகளுக்கு பொருந்தாது என்பதும் அறிந்த உண்மை. இந்த உண்மை மாநில அரசுக்கு தெரிந்திருந்தாலும், சிதம்பரம் நடராஜர் கோயிலினை எப்படியாவது தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் இந்த மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முற்றிலும் அவமதிக்கும் செயலாகும். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !