சங்கடஹர சதுர்த்தி விரதம் : விநாயகரை வழிபட நினைத்தது நடக்கும்!
ADDED :1071 days ago
பெளர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய முக்கியமான விரதம் சதுர்த்தி விரதம். சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சகல விதமான துன்பங்கள், தோஷங்கள் விலகி வளமான வாழ்வு அமையும். முதலில் தன் தாய் பார்வதிக்கு கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது எல்லாம் இவ்விரதம் இருந்து தான். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல். அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடிய சதுர்த்தி என்பதால் இந்த நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். இன்று விநாயகரை வழிபட வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.