மருதமரம் சிங்கம்பிடாரி சேவுகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1198 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே மணியகாரன்பட்டியில் குட்டிமேய்க்கிபட்டி பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட மருதமரம் சிங்கம்பிடாரி சேவுகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார் மலையன் தலைமையில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் செய்திருந்தனர்.