உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவருளும் குருவருளும் இருந்தால் மஹா பெரியவரின் ஆசி கிடைக்கும்

திருவருளும் குருவருளும் இருந்தால் மஹா பெரியவரின் ஆசி கிடைக்கும்

மதுரை: ‘‘பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும். திருவருளும், குருவருளும் இருந்தால் அவர்களுக்கு காஞ்சி மஹாபெரியவரின் அருள் கிடைக்கும்’’ என மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

கூடல்நகர் ஆனையூர் மெயின் ரோடு வ.உ.சி., தெருவில் காஞ்சி மஹா பெரியவர் கோயில், பிரார்த்தனை மையம் திறப்பு விழா, எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நடிகர் வையாபுரி முன்னிலை வகித்தார். மையத்தை திறந்து வைத்து, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: ரீல், ரியல் எது எனத் தெரியாத குழப்பமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.

சமூக ஊடகங்களால் நன்மைகள் இருந்தாலும், அதற்கு ஈடாக தீமைகளும் உள்ளன. அதிலிருந்து குழந்தைகளை காக்க பெற்றோர் அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்த வேண்டும். திருவருளும், குருவருளும் இருந்தால் அவர்களுக்கு மஹா பெரியவரின் அருள் கிடைக்கும் என்றார்.

முன்னதாக, காலையில் சிறப்பு ஹோமம், மாலையில் அனுஷ உற்ஸவத்தை முன்னிட்டு சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆடிட்டர் சேது மாதவா, அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அரசு வழக்கறிஞர் சொக்கலிங்கம், ஏ.பி.சி., தலைவர் சண்முகம், எழுத்தாளர் ஆதவன் பங்கேற்றனர்.

இம்மையத்தில் மாதந்தோறும் அனுஷ நட்சத்திர வைபவம், வியாழன் தோறும் குரு வார பூஜை நடக்க உள்ளது. ஜூலை 6 முதல் 19 வரை திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்க உள்ளது.

விவரங்களுக்கு: 94426 30815.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !