கெங்கை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா: அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :992 days ago
புதுச்சேரி: கெங்கை முத்துமாரியம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி அரவிந்தர் வீதியில் உள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோயிலில் பத்தாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.