மகா சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :893 days ago
பெரம்பலுார்:ஜெயங்கொண்டத்தில், மகா சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அரியலுார் மாவட்டம். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவில் எழுந்தருளியுள்ள மகா சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு பிரார்த்தனை எஜமானர் சங்கல்பம், புண்யாஹாவாசனம், மிருத்ஸங்க்ரவினம், அங்குரார்பணம் வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் இரவு 8 மணிக்கு பூர்ண குதி விசேஷ பூஜை, விசேஷ தீபாரதனையும் நேற்று காலை 7 மணிக்கு புண்ணியாகாவசனம் கால சாந்தி பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம், பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அறங்காவலர் ஆகியோர் செய்திருந்தனர்.