ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது
ADDED :1191 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள் வாங்கியதால், பாசி படர்ந்த பவள பாறைகள் வெளியில் தெரிந்தது.
நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவள பாறைகள் வெளியில் தெரிந்தது. மேலும் பாறை பள்ளத்தில் தேங்கி கிடந்த கடல்நீரில் சிற்பிகள், சிறிய மீன் குஞ்சுகள் தத்தளித்தது. நேற்று புனித நீராட வந்த பக்தர்கள், கடல்நீர் உள் வாங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மதியம் 12 மணிக்கு மேல் கடல் நீர்மட்டம் உயர்ந்ததும், அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.