கொடை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்
ADDED :892 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜை வேத அனுக்கையுடன் துவங்கின. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், , வாஸ்து சாந்தி, மிருத்சங்கீரஹணம், அங்குரார்பனம், ரக்க்ஷாபந்தனம் நடந்தது. இரண்டாம் யாசாலை சாலை பூஜையில் பூர்ணாகுதி, தீபாதரனை. விக்ரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலுடன் மூன்றாம் யாகசாலை பூஜையும், தொடர்ந்து நான்கு நாள் யாகசாலை பூஜை நடக்கின்றன. ஜூலை 9 ,ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் அருள்மிகு ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.