உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெலுங்கானா காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

தெலுங்கானா காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

ஹைதராபாத்: பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க தெலுங்கானா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாரங்கல்லில் உள்ள காளி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

தெலுங்கானாவில், ரூ.6,100 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவடைந்த திட்டங்களை துவக்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் வாரங்கல் வந்தடைந்தார். அங்கு அவரை, அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, கார் மூலம் வாரங்கல்லில் உள்ள பத்ரகாளி கோயிலுக்கு வந்த மோடிக்கு, கோயில் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பராமரிக்கப்படும் பசுக்களுக்கு உணவு வழங்கிய மோடி, பிறகு காளியை வழிபாடு செய்தார்.

புறக்கணிப்பு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க போவதாக அம்மாநிலத்தை ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !