உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் வைகுண்டவாச பெருமாள் கோவில் திருத்தேர் உற்சவம்

நத்தம் வைகுண்டவாச பெருமாள் கோவில் திருத்தேர் உற்சவம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் வைகுண்டவாச பெருமாள் கோவில் திருத்தேர் உற்சவத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 1 ம ்தேதி முதல் தினமும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் சாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக தேரில் எழுந்தருளினார். அதையடுத்து, காலை 7:30 மணிக்கு திருத்தேர் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !