அழகன்குளம் கோட்டை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :893 days ago
ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் ஹிந்து சமூக சபைக்கு பாத்தியப்பட்ட கோட்டை முனீஸ்வரர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு ஜூலை 7ல் கணபதி பூஜையுடன் யாகசாலையில் பூர்ணகும்ப கலசங்கள் வைத்து தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. கும்ப கலசங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று காலை 9:40 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கோட்டை முனீஸ்வருக்கு கும்பநீர் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.