உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: கண் திறப்பு நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா: கண் திறப்பு நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது.இக்கோவிலில் கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.


இந்த நிலையில் 30 ஆம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகின்ற 18 ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்க உள்ளது. அதனையொட்டி இன்று காலை குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் வன பத்ரகாளியம்மனுக்கு திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரமும்,அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிங்கப்பட்ட குண்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் மண்வெட்டியால் குண்டம் கண் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கோயில் பணியாளர்கள் ஆகியோர் கண் திறந்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் மற்றும் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு குண்டம் கண் திறத்தல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. குண்டத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சியினை மண்வெட்டியால் திருக்கோவில் அறங்காவலர் வசந்த சம்பத் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !