திருப்புத்தூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :894 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலவர் பைரவர் அமர்ந்த பத்மாசனயோக நிலையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரமேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சர்யார்களால் மதியம் 12:30 மணி அளவில் பல வித திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர்.