அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் ஆடி அமாவாசை விழா: ஆக. 16ல் கோலாகலம்
ADDED :894 days ago
நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை தினம் ஆக.16ல் கடைபிடிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வைகை ஆற்றின் வலது கரையோரத்தில் அமைந்துள்ளதால் ஆடி அமாவாசை வெகு சிறப்பாக நடைபெறும். சுற்றுப்புற ஊர்களில் இருந்து முன்னோர்களுக்காக திதி கொடுக்க வருவோர், தோஷம் நிவர்த்திக்காக வருவோர் வைகை ஆற்றில் நீராடி ஆஞ்சநேயரை தரிசித்து மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டில் இம்மாதம் 17 (ஆடி 1) மற்றும் ஆக.16 (ஆடி 31) என இரண்டு தினங்களில் வருகிறது. எனவே பக்தர்கள் குழப்பம் இன்றி ஆடி அமாவாசையை கடைபிடிப்பதற்காக அரசு ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில் ஆக.16 அன்று வரும் அமாவாசையை, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஆடி அமாவாசை நாளாக கடைபிடிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.