உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடியில் அய்யப்பனை தரிசிக்க சபரிமலை நடை ஜூலை 16ல் திறப்பு

ஆடியில் அய்யப்பனை தரிசிக்க சபரிமலை நடை ஜூலை 16ல் திறப்பு

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, ஜூலை 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில், நெய்யபிஷேகம் உட்பட, அனைத்து பூஜைகளும் நடக்கும். ஆடி மாத பூஜைக்காக, ஜூலை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  21ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !