உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் அறங்காவலர், உறுப்பினர்கள் நியமனம்

கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் அறங்காவலர், உறுப்பினர்கள் நியமனம்

கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பழமையும் புரதான சிறப்பினையும் பெற்ற இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சித்தி விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக கோட்டைச்சாமியும், உறுப்பினர்களாக லலிதா பாலன், ஆர். பாபு ஆகியோர்களுக்கு கோயில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலையில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்புராயலு பதவி நியமனம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கெஜேந்திரன், சந்திரசேகர், கணேஷ், மணிகண்டன் மற்றும் கீழக்கரை வர்த்தக சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !