கோவில் காலியிடம் ஏலம் ஒத்திவைப்பு
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் இந்து ஆற நிலையத்துறைக்கு உட்பட்டதாகும். கோவிலில் உள்ள காலி இடத்தில் கடை நடத்த ஏலம் நடந்த போவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்தது இருந்தனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குன்னத்தூர் நால் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதில் ரவுண்டானா அமைக்க வேண்டும். கோவில் இடத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. எனவே ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். அப்பகுதி பொது மக்கள் அங்காலம்மன் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. குமாபா பிஷேகத்திற்கு பின் ஏலத்தை நடத்தலாம் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதனையொட்டி, நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஏலத்தை கோவில் நிர்வாகத்தினர் ஒத்தி வைத்தனர்.