உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்றவர்கள் : உத்தமபாளையம், சின்னமனூரை சேர்ந்த நால்வர் பரிதவிப்பு

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்றவர்கள் : உத்தமபாளையம், சின்னமனூரை சேர்ந்த நால்வர் பரிதவிப்பு

உத்தமபாளையம்: ஜம்முவில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 பேர் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர், இந்திய ராணுவம் அவர்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளது..

ஜம்முவில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் தானாக உருவாகும் பளி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அங்கு செல்வதுண்டு. கடந்த ஜூலை முதல் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து 21 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. அதில் உத்தமபாளையத்தை சேர்ந்த போட்டோகிராபர் செல்லப்பாண்டு 54, அவரது மனைவி செல்வி 48, சின்னமனூர் ஒத்தவீட்டை சேர்த்த ராசாங்கம், நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் அடங்குவர். பனிலிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பும் வழியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரும் பாதையில் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்படடுள்ளது பாறைகள் உருண்டு வந்ததில் இவர்களது வாகனம் சேதமடைந்துள்ளது. இந்திய ராணுவம் அவர்களை மீட்டு மணிக்காம என்ற இடத்தில் ராணுவ முகாமில் பத்திரமாக முகாமில் தங்க வைத்தள்ளனர். இது தொடர்பாக செல்லப்பாண்டி அனுப்பி உள்ள வீடியோவில் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு ஜூலை 8 ல் திரும்பிக் கொண்டிருந்த போது பாறைகள் உருண்டு பாதையில் போக முடியாமல் சிக்கி கொண்டோம். எங்களிடம் இருந்த ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் காணாமல் போய்விட்டது. தமிழக அரசு எங்களை மீட்க உதவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !