ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :888 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைறை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவில் கோயில் முன்பு யாகசாலை அமைத்து பூஜைகள் நடந்தது. மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம், பன்னீர், தயிர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்தனர். வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.