உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதில் குழப்பம்

ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதில் குழப்பம்

தேவிபட்டினம்: ஆடி மாதத்தில் முதல் மற்றும் கடைசி என மாதத்தில இரண்டு அமாவாசை தினங்கள் வருவதால், ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நீராடும் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆடி 31 (ஆகஸ்ட் 16)இல், வரும் அம்மாவாசையை ஆடி அமாவாசையாக கடைப்பிடிக்க அர்ச்சகர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

முன்னோர்களை வழிபடும் விதமாகவும், முன்னோர்களுக்கு அவர்களின் வாரிசுதாரர்களின் சார்பில் முன் ஜென்ம பாவம் தீரும் வகையில், இந்துக்கள் முறைப்படி பிதுர்கடன் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், முன்னோர்களுக்கு ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அதற்கு தீர்வு கிடைப்பதாக நம்பப்பட்டு வருவதால், ஆடி, தை அமாவாசை தினங்களில் புண்ணிய தளங்களில் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வகையில் எதிர்வரும் ஆடி மாதத்தில், ஆடி 1, முதல் நாள் மற்றும் ஆடி 31, ஆகிய தேதிகளில் அம்மாவாசை தினங்கள் என நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் மட்டுமே இரண்டு அமாவாசை தினங்கள் குறிக்கப்பட்டுள்ளதால், இதில் எந்த அமாவாசை தினத்தில் வழிபாடு செய்வது என குழப்பத்தில் பக்தர்கள் உள்ளனர். இதுகுறித்து ஆன்மீக சிவாச்சாரியார்கள் ஆடி 31 (ஆகஸ்ட் 16) அன்று வரும் அமாவாசையை ஆடி அமாவாசை தினம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேவிபட்டினம் நவபாஷாண அர்ச்சகர் சிவாச்சாரியார் ராம்குமார் கூறுகையில், ஆடி 1 ல், குறிக்கப்பட்டுள்ள அமாவாசை முந்தைய மாதமான ஆனி மாதத்தில் துவங்கி விடுகிறது. ஆகையால் ஆடி 31ல் துவங்கும் அமாவாசைதான் ஆடி அமாவாசை ஆகும்.எனவோ ஆடி 31, ஆடி அமாவாசை தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !