ஓம் நமோ பகவதே ருத்ரே: அமர்நாத் பனி லிங்கத்தை தரிசித்த பக்தர்கள் பரவசம்
ADDED :893 days ago
ஜம்மு -- காஷ்மீரில், இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு, ஆண்டுதோறும் யாத்திரையாக செல்லும் பக்தர்கள், இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்தாண்டுக்கான யாத்திரை, கடந்த 1ல் துவங்கியது. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்த யாத்திரை சமீபத்தில் மீண்டும் துவங்கியது. இன்று காலை நடைபெற்ற வழிபாட்டில் ஹர ஹர மகாதேவா என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.