உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு!

கோவில்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியல் வெளியீடு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில்களுக்கு, வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், பாக்கி வைத்திருப்போர் பெயர் மற்றும் முகவரியை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி, கோவில் செயல் அலுவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற கோவில்களிலும், வாடகை பாக்கி வைத்திருப்போர் பட்டியலை வெளியிடும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பிள்ளையார்பாளையம் மகாஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், அறம்வளத்தீஸ்வரர் கோவில், ஆகியவற்றில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு மனை வரி, நிலம் குத்தகை, கட்டட வாடகை, என பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் மற்றும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை விவரம் அச்சிடப்பட்ட விளம்பரப் பதாகையை, கோவில் அலுவலகம் முன் வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !