வன பத்ரகாளியம்மன் கோவிலில் தகர செட்டுகள் அமைத்தல்
ADDED :894 days ago
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிகுண்டம் விழா நடைபெற உள்ளதை அடுத்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக, தகர செட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது. வன பத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவிலின், 30ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வரும், 18ம் தேதி பூச்சாட்டுடன் தூங்குகிறது. 23ம் தேதி கொடியேற்றமும், 25ம் தேதி அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் இறங்குதலும், 27ம் தேதி பரிவேட்டையும், வான வேடிக்கையும், 28ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு ஆகியவை நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, கோவில் வளாகத்தில் தகர செட்டுகள் போடும் பணிகள் நடைபெறுகின்றன.