திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 26.79 லட்சம் உண்டியல் வருமானம்
ADDED :894 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள் உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சுரேஷ், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி ஆறுமுகம், அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி, கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 26,79,122. தங்கம் 183 கிராம், வெள்ளி 1,940 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.