நவகிரக கோட்டையில் ஆடி அமாவாசை வழிபாடு: மகா மிருத்யுஞ்ஜய வேள்வி
ADDED :818 days ago
பல்லடம்: சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. பல்லடம் அருகே, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சிவபெருமான் மூலவராக அருள்பாலிக்கிறார். ஆடி அமாவாசை நாளான இன்று கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முன்னதாக, உலக நன்மை கருதி மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. 108 தீர்த்த கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள், இளநீர், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், அம்மையப்பருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் மூலம், நவகிரகங்களுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசா