உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாய் படவேட்டம்மனுக்கு ஆடி உற்சவம் விமரிசை

தாய் படவேட்டம்மனுக்கு ஆடி உற்சவம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், அய்யப்பா நகர், தாய் படவேட்டம்மன் கோவிலில், 46ம் ஆண்டு ஆடி உற்சவம் நேற்று நடந்தது. உற்சவத்தையொட்டி, நேற்று, காலை 5:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு மஹா அபிஷேகமும், காலை 7:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும் நடந்தது. காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் படையலிடப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. காலை 9:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !