முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :853 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 7ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் அலங்காரம் நடந்தது. 17ல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 18ல் இளங்காளியம்மன் கோயில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று, வைகை ஆற்றில் கரைத்தனர். சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.