நாச்சம்மை, ஒச்சம்மை கோயிலில் மண்டலபூஜை
ADDED :1182 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் நாச்சம்மை, ஒச்சம்மை கோயில் கும்பாபிஷேக விழா முடிந்து 48வது நாள் கழித்து மண்டலபூஜை விழா நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜை நடந்தது.பின்பு நாச்சம்மை,ஒச்சம்மை பால்,சந்தனம், மஞ்சள்,திரவிய பொடிகள் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், திபாரதனை நடந்தது.கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.