உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், கருட பஞ்சமி; கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்!

இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், கருட பஞ்சமி; கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்!

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலம் பல ஏகாதசி விரதத்திற்கு சமமான பலனை தரும். ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய விஷ்ணுபதி புண்ணிய நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம். தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். அது, ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அமைகிறது. விஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணு வையும், மகாலட்சுமியையும் பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம்.


கஸ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். பறவைகளின் அரசனான கருடனுக்கு ‘பட்சி ராஜன்’ என்றும் பெயருண்டு. வினதையின் மகன் என்பதால் ‘வைநதேயன்’ என்றும் அழைப்பர். இவரின் அவதார நாளான கருடபஞ்சமி இந்த ஆண்டு ஜூலை 29ல் கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றினால் எதிரி தொல்லை மறையும். மணமான பெண்கள் கருடாழ்வாருக்கு துளசி மாலை சாத்தினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். விஷப் பூச்சிகளிடம் இருந்து காத்துக் கொள்ள விவசாயிகள் இவரை வழிபடுகின்றனர். கருடாழ்வாரை வழிபட சகலவிதமான நன்மைகளும் பெருகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !