திண்டிவனம் முத்தாலம்மன் கோவிலில் ஆடி பெருவிழா
ADDED :851 days ago
திண்டிவனம், : திண்டிவனம் நல்லியகோடன் முத்தாலம்மன் கோவிலில் 20வது ஆண்டு சாகை வார்த்தல், ஆடி பெருவிழா நடந்தது.
இக்கோவிலில், கடந்த 16ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வருவதை நிறைவு செய்யும் வகையில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்த நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சாகை வார்த்தலும் நடந்தது. மாலை மூலவர் முத்தாலம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், கோவில் வளாகத்தில் உள்ள புற்றுமாரியம்மன் நாகாத்தம்மன் அலங்காரத்திலும், உற்சவர் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.