ரூ.200 கோடி சிவன் கோவில் சொந்தை மீட்க கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
காரைக்கால்; காரைக்காலில் ஆதிபுரீஸ்வர் கோவிலில் ரூ.200கோடி சொத்துக்களை மீட்க கோரி கிராமமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காரைக்கால் கிழகாசாகுடி ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக்குழு மற்றும் கிராமவாசிகள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் இந்து அறநிலையத்துறை ஆணையர் கீழகாசாகுடி சிவன் கோவிலுக்குச் சொந்தமான 200கோடி சொத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜகணபதி தலைமையில் தொகுதி எம்.எல்.ஏ. திருமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. காரைக்கால் கீழகாசாக்குடி ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் கி.பி., 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் சோழன் போர் படை தளபதி உதயசந்திரகிரியால் கட்டப்பட்ட பழமையான சிவன்கோவில் ஆகும் இக்கோவிலுக்கு ரூ.200கோடி மதிப்பில் 5வேலி நன்செய் நிலம்,நான்கு வீதிகளில் 35மா புன்செய் நிலமும் இரண்டாம் ராஜராஜன் சோழன் வழங்கியதாக ஆவனம், கல்வெட்டுக்களாலும், செம்பேடுகளாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் கோவில் ஆவனங்களை போலியாக வைத்துகொண்டு கோவில் சொத்துக்களை உரிமை கொண்டாடி வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து கோவில் சொந்துக்களை மீட்டுத்தர வேண்டும். என்று கிராமமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் சுமார் 200க்கு மேற்பட்ட பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.