உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி விழா, 28 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், விழாவின் துவக்கமாக கோயில் கொடிமரத்தில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை துவங்கினர். முன்னதாக யாக பூஜைகள் அமைக்கப்பட்டு, விநாயகர், விக்னேஸ்வரர் பூஜையுடன் விழா கொடியை பூஜையில் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்பு பிச்சனார்கோட்டை மண்டகப்படி நிகழ்வாக முக்கிய வீதிகள் வழியாக விழா கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. பின்பு மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்பு கோயில் கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. முக்கிய விழாவான பூக்குழி விழா, ஆகஸ்ட் 11 ல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் மஞ்சள் நீராட்டுதல் விழாவும், ஆக.15 ல் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !