ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி; சுவாமி நீராடல்
ADDED :938 days ago
ராமேஸ்வரம்: ஆடிப் பூரம் யொட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் தீர்த்தவாரி சுவாமிகள் நீராடி, பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் 10ம் நாள் விழாவான இன்று காலை 10:30 மணிக்கு கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளினார். பின் அம்மனுக்கு மஞ்சள் நீராடல், கன்னிப் பெண்கள் பூஜை நடந்தது. இதனையடுத்து சிவ தீர்த்தம் குளத்தில் அம்மன் எழுந்தருளியதும் கோயில் குருக்கள் உதயகுமார், தீர்த்தவாரி சுவாமியுடன் புனித நீராடினார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின் அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.