பெரியகுளம் கோயில்களில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
ADDED :839 days ago
பெரியகுளம்: பெரியகுளம் கோயில்களில் ஆடிப்பூரம் விழா சிறப்பாக நடைபெற்றது. அம்மன் வளையல்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்திலும், வடகரை பள்ளத்து காளியம்மன் கோயிலில் அம்மன் வளையல் அலங்காரத்திலும் காட்சியளித்தனர். பாலசுப்பிரமணியர் கோயிலில் அறம் வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.